பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் தனது காதலியை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். விஜய்யின் '
பீஸ்ட்' படத்தின் மூலம் ஷைன் டாம் சாக்கோ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான இவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் 40 வயதாகும் ஷைன் டாம் சாக்கோ விரைவில் தனது காதலியை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.