நாய் மற்றும் பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் 24 மணி நேரமும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு ஆளான நபர்களுக்கு உடனடி மருத்துவ உதவி செய்யவும், மருத்துகள், ஊசிகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.