தமிழ் புத்தாண்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. தீர்த்தவாரி.

 திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீசௌந்தர்யநாயகி  உடனுறை ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தீர்த்தவாரி நடந்தது.  

திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீசௌந்தர்யநாயகி  உடனுறை ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். இந்த ஆண்டு விழா அதிகாலை வசந்த மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு (விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டிகேஸ்வரர்) பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பான அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு ஆலய வலம் வந்து கோபுர தரிசனம் தந்து பிரதான வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. அக்னி தீர்த்தத்திலும், காவரி ஆற்றிலும் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏற்பாடுகளை உபயதாரர் பண்டரிநாதன் சகோதரர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கோயில் வளாகத்தில் குரோதி  வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி