மணிப்பூரில் சமீபத்தில் மிக கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காங்கோப்கி பகுதியில் லுன்கின் (22) மற்றும் லுஃபிங் (22) என்ற இரண்டு பழங்குடி இளைஞர்கள் மெய்தி பழங்குடியினரால் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதுவும் அவர்களுக்கு திருப்தி அளிக்காததால் உடலை பல பாகங்களாக வெட்டி வீடியோ எடுத்துள்ளனர். இந்த கொடூர வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.