பிரதமர் மோடி இன்று குஜராத்தில் வாக்களிக்கிறார்

பிரதமர் மோடி இன்று தனது வாக்கினை பதிவு செய்கிறார். மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. குஜராத், சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடி இன்று வாக்களிக்கிறார்.
குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மோடி வருகையையொட்டி அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி