மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

59பார்த்தது
மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்ய சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து முன்னேறி மும்பை 9வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி