11 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

63பார்த்தது
11 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத், சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், மூன்றாம் கட்ட தேர்தல் திருவிழா நடந்து வருகிறது.
120 பெண்கள் உட்பட 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தொகுதிகளில் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 17 கோடியே 24 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கு 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.