ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் மோதும் KKR vs SRH

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (மே 24) நடந்த குவாலிபையர்-2ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தானை, ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்கச் செய்தனர். 139 ரன்களுக்கு ராஜஸ்தானை சுருட்டிய நிலையில், 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சூப்பர் வெற்றியைப் பெற்றனர்.

நாளை (மே 26) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி