2 சகோதரர்கள் உடல் நசுங்கி பலி (வீடியோ)

குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று (ஜூன் 25) பயங்கர சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
வாகோடியா சவுக் அருகே எல்&டி நாலெட்ஜ் சிட்டி என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது டெம்போ மோதியது. இதில் டெம்போவுக்கு கீழே சிக்கி பைக் இழுத்துச் செல்லப்பட்டது. பைக்கில் இருந்து கீழே விழுந்த சகோதரர்கள் இருவர் மீதும் டெம்போ ஏறியது. அதன் சக்கரத்தில் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி