முளைகட்டிய கொள்ளு மற்றும் சோளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மொச்சையை 3-4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து காய்ந்த மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான தானிய வடை தயார்.