மகளிர் உரிமைத் தொகை: அடுத்த ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு

64பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை: அடுத்த ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து, சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருவதாகவும், புதிதாக ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டவர்கள், மீண்டும் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2024 - 2025ம் ஆண்டுக்கான நிதியாண்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ.13,722 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி