"பெண்களும் மது குடிக்கலாம்" - விஜய் ஆண்டனி

108884பார்த்தது
இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆன்ட்டனி, மிருணாளினி நடிப்பில் உருவாகியுள்ள படம் "ரோமியோ". இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது, ரோமியோ படத்தில் பெண்கள் குடிப்பதை ஊக்குவிப்பது போல் காட்சிகள் உள்ளது என கேட்ட கேள்விக்கு, "மது ஆண்களுக்கு மட்டும் என்று எல்லை நிர்ணயம் செய்ய வேண்டாம். குடிப்பழக்கம் எல்லோருக்கும் பொதுவானது. ஆண்கள் குடிக்கலாம் என்றால், பெண்களும் குடிக்கலாம். நான் குடிப்பதை ஊக்குவிக்கவில்லை. எல்லாமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. ஆண்கள் கொடுக்கக்கூடாது என்றால் பெண்களும் குடிக்கக்கூடாது" என அவர் கூறியுள்ளார்.