உ.பி: திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண் நண்பரை இளம்பெண் ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீரஜ் 21 பிரியா ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் பழகியுள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியா தீரஜை வற்புறுத்தியுள்ளார். ஆனால், தீரஜ் பிரியாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரியா தீரஜுக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.