டார்ச் ஒளிருமா, உதய சூரியன் உதிக்குமா?

79பார்த்தது
டார்ச் ஒளிருமா, உதய சூரியன் உதிக்குமா?
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதிப் பங்கீடு பற்றி இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. நேரடியாக இதுவரை இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்டு வருவதாகவும், ஒரு தொகுதியை மட்டுமே தர முன்வரும் திமுக, உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், மநீம போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி