விலை குறைகிறது.. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

104278பார்த்தது
விலை குறைகிறது.. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விரைவில் நற்செய்தி ஒன்றை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம், சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மேல்முறையீட்டை அடுத்து படிப்படியாக விலையை குறைக்க நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி