உலக தைராய்டு தினம் அனுசரிக்கப்பட காரணம்

65பார்த்தது
உலக தைராய்டு தினம் அனுசரிக்கப்பட காரணம்
ஒவ்வொரு ஆண்டும் மே 25 ஆம் தேதி அன்று உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் இத்தினத்தில் தைராய்டு நோய் குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உலகளவில் 150 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தைராய்டு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகமாக வருகிறது. இந்தியாவில் 30 வயதை தாண்டும் பெண்களில் 30 முதல் 45% வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

தொடர்புடைய செய்தி