கொசுக்கள் ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் பிரிவு ரத்தம் உள்ளவர்களை அதிகம் தேடி கடிக்கின்றன. இதற்கு காரணம் ஓ பிரிவு ரத்தத்தில் இருக்கும் ஆன்டிஜென்கள்தான். இதில் இருக்கும் எச் ஆன்டிஜென்கள் கொசுக்களுக்கு தேவையான புரதச்சத்தை அதிக அளவில் கொடுக்கும். எனவே ஓ இரத்த பிரிவு கொண்டவர்களை கொசுக்கள் தேடித் தேடி கடிக்கின்றன. மனித உடலில் இருந்து வெளியேறும் அமோனியா வாசனையை கொண்டு கொசுக்கள் மனிதர்களில் ரத்தப் பிரிவை கண்டறிகின்றன.