ஃபிக்சட் டெபாசிட் செய்ய சிறந்த பேங்க் எது?

82பார்த்தது
ஃபிக்சட் டெபாசிட் செய்ய சிறந்த பேங்க் எது?
சம்பளத்தின் ஒரு பகுதியை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டு வரலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.ஆனால், எந்த பேங்கில் டெபாசிட் செய்வது? யார் அதிக வட்டி தருவது? என்ற குழப்பம் இருக்கும். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு தற்போது வழங்கி வரும் வட்டி விகிதங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, 400 நாட்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.10%, பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) 7.25% வழங்குகிறது. கனரா வங்கி - 444 நாட்களுக்கு 7.25%, HDFC வங்கி - 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவாக 7.25%, ICICI வங்கி -15 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை 7.20%, பேங்க் ஆப் பரோடா (BOB) 2 வருடங்களுக்கு மேல் 3 வருடங்கள் வரை - 7.25% வழங்குகின்றன.

தொடர்புடைய செய்தி