புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "சுதந்திர இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடும் செயல்படும் ஒன்றிய பாஜக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.