ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் புயலால் சென்னையில் மழை பெய்து வருகிறது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் - மரக்காணம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.