டாப்-அப் லோன் என்றால் என்ன? எவ்வளவு கிடைக்கும்?

72பார்த்தது
டாப்-அப் லோன் என்றால் என்ன? எவ்வளவு கிடைக்கும்?
டாப்-அப் லோன் என்றால் நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனிலேயே டாப்-அப் செய்து மேலும் அதிக பணத்தை பெற்றுக்கொள்ளலாம். வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகன கடன்களை நாம் டாப்-அப் செய்யலாம். வீட்டினை சீரமைப்பது, கல்வி கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட நிதி தேவைகள் வரும்பொழுது இந்த லோன் டாப்-அப் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் ஏற்கனவே வாங்கி இருக்கக்கூடிய கடனை சரியான வகையில் திருப்பி செலுத்தி இருக்க வேண்டும். உங்களது கிரெடிட் ஸ்கோர், உங்களது வருமானம் உள்ளிட்டவற்றை வைத்து மேலும் எவ்வளவு பணம் தரலாம் என்பதை வங்கி முடிவு செய்யும்.

தொடர்புடைய செய்தி