"டெட்ரா பேக் மது திட்டம் தற்போது இல்லை"

82பார்த்தது
"டெட்ரா பேக் மது திட்டம் தற்போது இல்லை"
90 மி.லி. மதுவை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் எந்த முடிவும் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. டெட்ரா பேக்கில் டாஸ்மாக் மது என செய்திகள் பரவிய நிலையில், 90 மி.லி. டெட்ரா பேக்குகளை விற்பதற்கான முயற்சியோ, கருத்துருவோ தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவில்லை என டாஸ்மாக் வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்த நிமிடம் வரை அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி