சிறிய உயிரினமான ஈக்கள் நம் உணவில் ஏற்படுத்தும் தாக்கம் அவற்றின் அளவை விட மிகப் பெரியது. சுவையாக சமைத்து வைத்துள்ள உணவு திறந்திருந்தால் ஈக்கள் அதனை முட்டையிடுவதற்கான கூடாக மாற்றிக் கொள்ளும். அது உணவில் பாக்டீரியா கிருமிகளை அதிகரிக்க செய்யலாம். குப்பைகள் மற்றும் உணவுகளில் ஊர்ந்து செல்லும் ஈக்கள் மனிதர்களுக்கு குறைந்தது 65 விதமான நோய்களை பரப்பக் கூடும். வயிற்றுப்போக்கு, காலரா உட்பட பல நோய்கள் இதில் அடங்கும்.