பிரஜ்வாலை விமான நிலையத்தில் கைது செய்வோம்: உள்துறை அமைச்சர்

55பார்த்தது
பிரஜ்வாலை விமான நிலையத்தில் கைது செய்வோம்: உள்துறை அமைச்சர்
கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இன்று முக்கிய கருத்து தெரிவித்துள்ளார். ரேவண்ணா இந்தியா திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்வது குறித்து சிறப்பு புலனாய்வு குழு முடிவு எடுக்கும். ரேவண்ணா மே 31ஆம் தேதி எஸ்ஐடி முன்னிலையில் ஆஜராவதாக வீடியோ வெளியாகியுள்ள நிலையில், விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி