கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 30) அதிகாலை முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட போது வெள்ளமும் ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.