‘மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூலில் இருந்து 'டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய்' விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே
சூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அவரது வாக்கினை விஷால் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். நிச்சயமாக விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவோம் என்ற அவர் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.