விருதுநகர் மருத்துவமனை வளாகத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் எம். வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன், தமிழகத்தில் 6 நாள் சுற்றுப்பயணமாக தூய்மைப்பணியாளர்களின் குறைகள் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த சம்பளம் வழங்கவில்லை என்றும் பி. எப் பிடித்தம் செய்யவில்லை என்றும் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன மேலாளர்கள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், திறனற்ற வேலைக்கு தங்களை வேலைக்கு எடுத்துவிட்டு திறன் சார்ந்த வேலைகளை தங்களுக்கு வழங்குவதாக குற்றஞ்சாட்டினர் என்றும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் 7 லட்சம் தூய்மை பணியாளர்கள் இருப்பதாகவும் மாநிலத்திற்கு மாநிலம் தூய்மை பணியாளர்களின் சம்பளம் மாறுபடுவதாகவும், தமிழக அரசு தூய்மை பணிகளுக்கு ஒப்பந்தமுறையை ஒழிக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளே தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறையை கொண்டு வரவேண்டும் என்றும் தூய்மை பணியாளர் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிற மாநிலங்களில் உள்ளதுபோல் தூய்மை பணியாளர்கள் கார்பரேஷன் ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் ஒருநபருக்கு 10 லட்சம் லோன் கிடைக்கும் 4% வட்டியுடன் இதற்கு மானியமும் உண்டு என்றார். மாநில அளவில் தூய்மை பணியாளர்கள் கமிஷன் ஆரம்பிக்க வேண்டும்.