அதிகாலை அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து

1882பார்த்தது
விருதுநகர் அருகே அதிகாலை அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் எட்டு பெண்கள், ஏழு குழந்தைகள் உட்பட 39 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வச்சகாரப்பட்டி பகுதியில் கோவையிலிருந்து கோவில்பட்டி சென்ற அரசுப் பேருந்து சாலையோர பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் 34 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சிங்காநல்லூரில் இருந்து நேற்றிரவு கோவில்பட்டிக்கு கோவை மண்டல அரசுப்பேருந்தை பழனியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகபூபதி ஓட்டிவந்துள்ளார். பேருந்தில் 24 ஆண்கள் 8 பெண்கள் 7 குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் பயணித்து வந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் வச்சகாரப்பட்டி அருகே வந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் அச்சு முறிந்து அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள் ஆனது. சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் காயம்பட்டவர்களை மீட்டு 108 வாகனம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி