வெயிலின் கொடுமையை குறைத்த மழை

566பார்த்தது
அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 13 மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சுமார் அரை மணி நேரம் கன மழையாக பெய்தது. கடும் வெயில் வாட்டி வதைத்து வந்து நிலையில் தற்போது பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அடுத்த சில நாட்களுக்கு இந்த மழை நீடித்தால் வெயில் தாக்கம் வெகுவாக குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி