பாத்ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

51பார்த்தது
பாத்ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் மகேந்திரன். ‌ இவரது மனைவி ஸ்ரீரங்காய் (62). இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி ஸ்ரீரங்காய் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது காலை 11 மணியளவில் ஸ்ரீரங்காய் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்காய் கணவர் மகேந்திரன் புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் நேற்று ஏப்ரல் 2 சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த செய்தி குறிப்பை போலீசார் இன்று ஏப்ரல் 3 வெளியிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி