போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சிகளின் கூட்டு நடவடிக்கையில் சுமார் 700 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. குஜராத் கடற்கரையில் போர்பந்தரைச் சுற்றியுள்ள இந்திய கடல் பகுதியில் 8 ஈரானியர்கள் நேற்று (நவ., 15) கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளின் மதிப்பு, சர்வதேச சந்தையில் ரூ.2,500-3,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதான 8 பேரிடமும் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.