தமிழ் சினிமா உலகிற்கு இந்த மாதம் மிகவும் மோசமான மாதமாக மாறி வருகின்றது. ஏற்கனவே கடந்த 9ஆம் தேதி வயது மூப்பு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். இந்நிலையில் நேற்று (நவ15) ஆம் தேதி, கிடாயின் கருணை மனு படத்தினை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இவர் கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தமிழ் சினிமா உலகத்தினரையும் பெரும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது.