கார்த்திகை மாத பிறப்பையொட்டி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஐயப்ப பக்தர்கள், அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். மண்டல பூஜையையொட்டி, 48 நாட்கள், 60 நாட்கள் என பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். வரும் டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜையும், 2025 ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நேற்று (நவ., 15) மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.