சிவகாசி: பாஜக அரசுக்கு பாடம் புகட்டுங்கள். அசோகன் MடA பேச்சு..

546பார்த்தது
சிவகாசி: பாஜக அரசுக்கு பாடம் புகட்டுங்கள். அசோகன் MடA பேச்சு..
தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு
பாடம் புகட்ட கை சின்னத்தை ஆதரியுங்கள் சிவகாசியில்
அசோகன் எம். எல். ஏ. தேர்தல் பிரசாரம்.
விருதுநகர் மாவட்டம்,
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தி. மு. க. கூட்டடணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம்தாகூர் போட்டியிடுகிறார். மாணிக்கம்தாகூரை ஆதரித்து சிவகாசியில் கிழக்கு ஒன்றியத்தில் அனுப்பன்குளம், ஆண்டியாபுரம், மீனம்பட்டி, பேராபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் தேர்தல் பிரசாரம் செய்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அனைவரும் எம்எல்ஏவை வரவேற்று கை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை. ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்ட அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்றார். பிரசாரத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிகண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அன்பரசு, சின்னத்தம்பி, தனலட்சுமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி