விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும் - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள ஸ்ரீநந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீநந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.