சிவகாசி: வளர்ச்சி பணிகளுக்கு எம். பி தலைமையில் பூமி பூஜை...

69பார்த்தது
சிவகாசியில், எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்திலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சி பகுதியில், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். சிவகாசி மாநகராட்சியில் உள்ள 29, 36, 37 மற்றும் 42வது வார்டு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதி, ஆழ்துளை கிணறு வசதி, குளியல் நீர் தொட்டி உள்ளிட்ட, சுமார் 24 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் அசோகன், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தி தொட பாளர் MKM மீனாட்சி சுந்தரம் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி