சிவகாசி: இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது-எம்பி பேச்சு...

64பார்த்தது
'இந்தியா கூட்டணி' வலுவாகவே உள்ளது.
சிவகாசியில், மாணிக்கம் தாகூர் எம். பி. பேச்சு.சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்படும் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உயர் கோபுர மின்விளக்கு வசதி, 2 இடங்களில் ஆழ்துளை குழாய் அமைக்கும் பணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குளியல் தண்ணீர் தொட்டி கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் எம். பி. மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம். பி. க்கள் தங்களது தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதற்குகூட ஒன்றிய அரசுடன் போராட வேண்டி உள்ளது. பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினால், காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக பேசுபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. இத்தனையையும் தாண்டி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்பது இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகத்தான். தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரிய வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு மகத்தான ஆதரவு கிடைக்கும். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you