சிவகாசி: பிரபல ஜவுளிக் கடையில் தீ விபத்து...

83பார்த்தது
சிவகாசி வடக்கு ரத வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள வடக்கு ரத வீதியில் செண்பகராஜன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது இந்த கடையில் நேற்று இரவில் பணி முடிந்து தொழிலாளர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இன்று காலை வந்து கடை திறக்கும் பொழுது கடை முழுவதும் கரும்புகையுடன் காட்சியளித்தது உடனடியாக அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், அதன் பேரில் நிலைய அலுவலர் வெங்டேஷன் தலைமையில் 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு உள்ளே சென்றனர். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டுபிடித்தனர் உடனடியாக ராசன நுரை மூலமாக புகையை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி