சிவகாசி: தொடர் சாரல் மழை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

50பார்த்தது
சிவகாசியில் தொடர் சாரல் மழை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இன்று அதிகாலையிலிருந்து தொடர் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வட கிழக்கு பருவ மழை மற்றும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனாலும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேக மூட்டமாக இருந்தாலும் பலத்த மழை பெய்யாத நிலையே இருந்து வந்தது. மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. இந்த நிலையில், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் சாரல் மழை காரணமாக சிவகாசியின் பிரதானமான தொழிலாக இருக்கும் அச்சகங்களில் வேலை வாய்ப்பு சற்று பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து 20 நாட்களான நிலையில் ஒரு சில பட்டாசு ஆலைகளில் இன்னும் உற்பத்தி பணிகள் துவங்கப்படவில்லை. சிவகாசி பகுதியில் தொடர் சாரல் மழை பெய்தாலும் தேவைக்கேற்ப பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்துவது குறித்து அவர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததின் படி இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. தொடர் சாரல் மழை காரணமாக சிவகாசியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி