சிவகாசி அருகே கூடுதல் மின் அழுத்தம் வழங்குவதற்கு ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள சுப்ரமணியபுரத்தை சேந்தவர் ரவிச்சந்திரன் இவர் தனக்கு சொந்தமான மின் இணைப்பிற்கு கூடுதல் மின் ( சிக்கல் பேஷாக உள்ளதை திரி
பேஷாக மாற்ற ) கூடுதல் மின் அழுத்தம் வேண்டுமென வெம்பக்கோட்டை மின் பகிர்மான அலுவலகத்தில் மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட உதவி மின் பொறியாளர் சேதுராமன் கூடுதல் மின் அழுத்தம் வழங்க வேண்டும் என்றால் பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாகவும் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ரவிச்சந்திரன் இது தொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ரவிச்சந்திரன் வழங்கி உதவி மின் பொறியாளர் சேதுராமனிடம் வழங்க கூறியுள்ளனர். இதை அடுத்து உதவி மின் பொறியாளர் சேதுராமனிடம் வழங்குவதற்காக மின் பகிர்மான அலுவலகம் சென்று பணத்தை ரவிசந்திரன் கொடுக்கும் பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் உதவி மின் பொறியாளர் சேதுராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் இதை அடுத்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்