இராஜபாளையம்: வணிக நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

67பார்த்தது
இராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில்மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ. 50 லிருந்து ரூ. 2000/-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஆய்வுகள் செய்தார். இந்த ஆய்வின்போது, தமிழில் பெயர் பலகை வைக்காத 28 நிறுவனங்கள் மீது தலா ரூ. 2, 000/-வீதம் மொத்தம் ரூ. 56, 000/-அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டன. தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதி 15 மற்றும் உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42B, தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 -ன் படி, ஒரு கடைகள் நிறுவனம் அல்லது உணவு நிறுவனம், தொழிற்சாலையில் அதன் பெயர் பலகை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பெயர் பலகையில் பிற மொழிகளில் இருந்தால், பெயர் பலகையில் பிரதானமாக தமிழ் மொழியில் இருக்க வேண்டும், இரண்டாம் இடத்தில் ஆங்கிலத்திலும், இதர மொழி மூன்றாவது இடத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :