விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம். சார் ஆட்சியர் பங்கேற்பு..

57பார்த்தது
சிவகாசியில் சார் ஆட்சியர் தலைமையிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ 45 கட்டாய வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் வடிவேல், ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், நெல் கொள்முதல் மையத்தில் ஒரு கிலோவுக்கு ரூ. 1 கமிஷனாக வசூல் செய்கின்றனர். மடவார் வளாகம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ரூ. 45 பெற்றுக்கொண்டு தான் கொள்முதல் செய்கின்றனர் என புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் பதில் அளித்தார்.
மேலும் பயிர் சேதத்துக்கு பிர்கா வாரியாக இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் தென்னையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி