லாரி மோதி டிரைவர் பலத்த காயம்

1061பார்த்தது
லாரி மோதி டிரைவர் பலத்த காயம்
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள டிவைடரில் உள்ள அரளி பூ செடிகளுக்கு தினசரி டேங்கர் லாரியில் கோவில்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் (54)தண்ணீர் கொண்டு வந்து செடிகளுக்கு தண்ணீர் விட்டு வருவது வழக்கம். அது நேற்று காலையில் டேங்கர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்த போது கோவில்பட்டியில் இருந்து மதுரையை நோக்கி சென்ற கேஸ் ஏற்றி செல்லும் டேங்கர் லாரி மோதியதில் பலத்த சேதமடைந்தது. இதில் கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி டிரைவர் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முத்து சீதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி