டாரஸ் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயம்

1543பார்த்தது
டாரஸ் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலத்த காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எட்டகாபட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (28) இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவரின் அம்மா சிவகாசியில் குடியிருந்து வருகிறார். அவரை பார்க்க தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு போய்விட்டு எட்டகாபட்டியை நோக்கி வந்த போது பேர்நாயக்கன்பட்டி அருகே எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மனைவி வீரலட்சுமி கொடுத்த புகாரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பூவநாதபுரத்தை சேர்ந்த சக்கையாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி