இராஜபாளையம்: போட்டி தேர்வுக்கான கருத்தரங்கம்; ஆட்சியர் பங்கேற்பு

77பார்த்தது
இராஜபாளையம்: போட்டி தேர்வுக்கான கருத்தரங்கம்; ஆட்சியர் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். 

இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று ஏப். 15 தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது, பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும் சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்புமிக்கவர்களாகிறீர்கள்.

இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்துகொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம். மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவமாகும் என்றார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி