ராஜபாளையம் அருகே இரு தரப்பினர் மோதலில் 13 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே புத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த கருமலைபாண்டியன் புத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று போது வீட்டிற்கு வெளியே வழிமறித்து இடையூறாக பிளக்ஸ் பேனர் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை கடந்து தனது வீட்டில் காரை நிறுத்திவிட்டார். இந்நிலையில் பேனர் கட்டி இருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களின் பேனரை அவமதித்ததாக கூறி கருமலை பாண்டியன் வீட்டற்குள் புகுந்து அவரது மனைவி கற்பகவல்லி உள்பட குடும்பத்தினரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கருமலை பாண்டியனின் உறவினர்கள் பேனர் வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட மாடசாமி என்பவரை திருப்பித் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கற்பகவல்லி தளவாய்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி ராஜா(பொறுப்பு), நேரில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தனர். இதில் சமுத்திரம், மாடசாமி,
முனியாண்டி, ராஜா, தங்கராஜ், துரைராஜ், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பேனர் வைத்ததாக கூறப்படும் மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ், கணேசன், முருகன், வைரமுத்து உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் புத்தூர் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.