விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் மூர்த்தி (20) இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்துள்ளார். மூர்த்தி வேறு சமூகத்தை சார்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலியை திருமணம் செய்து கொள்ள மூர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த மூர்த்தி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.