இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சேத்துார் பஜார் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக சேத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மனோகரன் தலைமையில் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆய்வில் புனல்வேலி பகுதியை சேர்ந்த ஓட்டக்காரன் (45) என்பவர் லாட்டரி சீட்டின் நம்பரை எழுதி விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து நம்பர் எழுதிய லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.