நாளை (நவ.27) வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்து வரும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "ஃபெங்கல் புயல் அடுத்த 2 நாட்களில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழ்நாட்டிற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.