நாளை (நவ.27) வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டின் கடற்கரைக்கு இணையாக 150 கி.மீ முதல் 200 கிமீ. வரை நிலை கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாளை புயலாக உருமாறும்" என்று கூறியுள்ளார்.